உள்ளூர் செய்திகள்
சாலை பணிகள் தன்மை குறித்து பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

சாலை பணிகள் தன்மை குறித்து பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு

Published On 2022-05-20 15:36 IST   |   Update On 2022-05-20 15:36:00 IST
தஞ்சை மாவட்டத்தில் சாலை பணிகள் தன்மை குறித்து பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சாவூர்:
 
தஞ்சாவூர் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் திருச்சி (நெ) திட்டங்கள் வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர் சீனிவாச ராகவன் தலைமையிலான குழுவினர்
திடீர் ஆய்வு செய்தனர்.

தஞ்சை கோட்ட த்தில் தஞ்சை நெடுஞ்சா லைத்துறை கட்டு மானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தின் சார்பில் பழைய இர்வின் பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி அதே இடத்தில் இருவழி சாலையாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டு வரும் இரட்டை பாலத்தின் கட்டுமான தரத்தின் உறுதி குறித்தும், பாலத்தின் நீளம் அகலத்தை அளந்தும் ஆய்வு செய்தனர்.

பின்னர் ஒரத்தநாடு நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்குட்பட்ட பாப்பாநாடு- மதுக்கூர் - பெருகவாழ்ந்தான் சாலை 11 கிலோ மீட்டர் வரை இடைவழி தடத்திலிருந்து இரு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகளின் தரம் மற்றும் கட்டுமானம் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் சாலை பணிகளின் தரம், அதன் தன்மை குறித்தும் ஆய்வு செய்தனர். அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். 

Similar News