உள்ளூர் செய்திகள்
ஏரியில் தவறி விழுந்த கல்லூரி மாணவி சாவு
ஏரியில் தவறி விழுந்த கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், இலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதியின் மகள் ஸ்வேதா(வயது 19) கோயமுத்தூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் ஸ்வேதா, இலையூர் கோயில் திருவிழாவுக்காக தனது தோழி மதுபாலாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்திருந்துள்ளார்.
அப்போது உடையார்பாளையம் பெரிய ஏரியில் குளிப்பதற்காக தனது தங்கை நிவேதா, தோழி மதுபாலாவுடன் சென்றுள்ளார்.
அங்கு மூன்று பேரும், கைகோர்த்த நிலையில் ஏரியில் இறங்க முயன்ற போது எதிர்பாரதவிதமாக மூவரும் வழுக்கி ஏரியில் விழுந்துள்ளனர். இதில் மதுபாலாவும், நிவேதாவும் ஏரி கரைக்கு திரும்பினர். நீச்சல் தெரியாமல் ஸ்வேதா மட்டும் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த மதுபாலாவும், நிவேதாவும் கூச்சலிட்டதையறிந்த பொதுக்கள், உடையார்பாளையம் காவல் துறையினர் உதவியுடன் ஸ்வேதாவை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.