உள்ளூர் செய்திகள்
மழை

திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை

Published On 2022-05-18 15:39 IST   |   Update On 2022-05-18 15:39:00 IST
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை பகுதியில் பெய்த மழையின் காரணமாக நிரம்பி வழிகிறது. நேற்று குடியாத்தம் மற்றும் ஆந்திர வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது.
வேலூர்:

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் ஆந்திர வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடை காலத்திலும் பாலாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

வாணியம்பாடி அடுத்த புல்லூரில் பாலாற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆந்திரா தடுப்பணை நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

தொடர் மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொடையாஞ்சி பாலாற்றில் இன்று மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல ஒடுகத்தூர் மேல் அரசம்பட்டு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆற்று வெள்ளம் வெட்டுவானம் அருகே பாலாற்றில் கலந்து ஓடுகிறது. இதனால் மீண்டும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை பகுதியில் பெய்த மழையின் காரணமாக நிரம்பி வழிகிறது. நேற்று குடியாத்தம் மற்றும் ஆந்திர வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக மோர்தானா அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறது. அங்கிருந்து பெரிய ஏரி பகுதிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் வேலூர் பாலாற்றிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

வேலூர் 15.1,காட்பாடி 20, குடியாத்தம் 15, பொன்னை 21, மேல் ஆலத்தூர் 16.2, திருவலம் 16.2.

Similar News