உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் பாலாற்று வெள்ளத்தால் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு

Published On 2022-05-18 15:21 IST   |   Update On 2022-05-18 15:21:00 IST
வேலூர் பாலாற்று வெள்ளத்தால் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் காட்பாடிக்கு சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.வேலூர் பாலாற்றில் சுமார் 200 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.விருதம்பட்டு பாலாற்றின் கரையில் காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

காவிரி கூட்டுக்குடிநீர் ஆற்றில் வெள்ளத்தில் கலந்து வீணாக செல்கிறது.
தண்ணீர் அதிகமாக செல்வதால் காவிரி குடிநீர் குழாய்களை உடனடியாக சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில்;

வேலூர் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக விருதம்பட்டில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் காட்பாடி பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உடனடியாக காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்களை சீரமைக்க முடியாது. தண்ணீர் அளவு குறைந்த பிறகு குழாய்கள் சீரமைக்கும் பணி தொடங்கப்படும்.

அதுவரை காட்பாடி பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் சப்ளை செய்ய முடியாது. 

உள்ளூர் குடிநீர் திட்டப்பணிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.

Similar News