உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் மோர்தானா அணையில் அதிகாரி ஆய்வு
குடியாத்தம் மோர்தானா அணையில் அதிகாரி ஆய்வு செய்தார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான குடியாத்தம் மோர்தானா அணை கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிரம்பி வழிந்து வருகிறது.
நீர்வளத்துறை அதிகாரிகள் நேற்று மோர்தானா அணை யில் ஆய்வு நடத்தினர்.
திருவண்ணாமலை பெண்ணையாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் வி.சாம்ராஜ் தலைமையில் நீர்வளத்துறை அதிகாரிகள் மோர்தானா அணை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அணைக்கு வரும் நீரின் அளவு, அணையில் இருந்து நீர் வெளியேறும் அளவு, அணையின் மதகு, அணையின் கரைப் பகுதிகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது வேலூர் மேல் பாலாறு வடிநில நீர்வளத்துறை கோட்ட செயற்பொறியாளர் ஆர்.ரமேஷ், குடியாத்தம் நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் பி. கோபி, உதவி பொறியாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.