உள்ளூர் செய்திகள்
ஆய்வுக்கு உட்படுத்தப்படாத படகுகளுக்கு மானிய திட்டங்கள் ரத்து செய்யப்படும்
ஆய்வுக்கு உட்படுத்தப்படாத படகுகளுக்கு மானிய திட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
கடலில் மீன் வளத்தை பாதுகாக்கின்ற வகையில் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் ஜூன் 14 வரை கடலில் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும இழுவைப் படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் இயங்கும் அனைத்துவகை மீன்பிடி விசைப்படகுகளும், ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு படகின் உறுதிதன்மை, எந்திரத்தின் குதிரைத்திறன் அளவு, படகின் நீள அகலம் ஆகியவை பதிவு சான்றுடன் சரிபார்க்கப்படும்.
இந்நிலையில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் படகுகள் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிமாவட்டங்களை சேர்ந்த மீன்வளத்துறை அலுவலர்களால் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது.
இது குறித்து கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மீனவர்கள் தங்களது மீன்பிடி விசைப்படகுகளை தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஓழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ், கட்டாயம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆய்வுக்கு உட்படுத்தப்படாத படகுகளுக்கு மானிய திட்டங்கள் நிறுத்தப்படுவதோடு, பதிவு சான்று ரத்து செய்யப்படும்.
பின்னொரு நாளில் ஆய்வு செய்ய இயலாது. நேரடி ஆய்வின்போது காண்பிக்கப்படாத மற்றும் பதிவு செய்யப்படாத படகுகள் கண்டறியப்பட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மானியம் பெறுவதற்கான புத்தகம் தொலைதொடர்பு கருவிகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். இவறறின் விவரங்களை ஆய்வு படிவத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும். ஆய்வின் போத, படகு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். படகுகளின் பதிவு சா ன்று, மீன்பிடி உரிமம், படகின் காப்புறுதி சான்றுகளின் அசல் ஆவணங்களுடன், நகல்களையும் அளிக்க வேண்டும்.
20 ஆண்டுகளுக்குமேலாக மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தப்படும் படகுகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் இயக்கிப் பார்த்த பிறகே அனுமரி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.