உள்ளூர் செய்திகள்
விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற மாற்றுத்திறனாளியை பாராட்டிய குடியாத்தம் நகர மன்ற தலைவர் சவுந்தரராசன்

தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற மாற்றுத்திறனாளி வாலிபர்

Published On 2022-05-17 15:26 IST   |   Update On 2022-05-17 15:26:00 IST
தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று மாற்றுத்திறனாளி வாலிபர் சாதனை படைத்துள்ளார்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மாற்றுத்திறனாளியான இவர் மாற்றுத் தினாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு இந்தியாவிற்காக பல பதக்கங்களை வென்றுள்ளார்.

இவர் வேலூர் அடுத்த பூட்டுத்தாக்கு கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் விஷ்ணுவிற்கு மாற்றுத்திறனாளி விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக பல்வேறு நுணுக்கங்களை தெரிவித்தும் போட்டிகளில் கலந்துகொள்வது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவரது ஆலோசனைகளை பேரில் மாற்றுத்திறனாளி தடகள விளையாட்டு வீரர் விஷ்ணு கடந்த வாரம் டெல்லியில் மாற்று த்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

அதில் மாற்று த்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார்.

சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள வீரர் வெங்கடாஜலபதியுடன் மாற்றுத்திறனாளிக்கான போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்ற விஷ்ணு குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராசனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

அப்போது நகர்மன்ற தலைவர் அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை தேடித்தர வேண்டும் எனவும் அதற்காக தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்தார்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் சி.என்.பாபு, திமுக பிரமுகர்கள் கா.கோ. நெடுஞ்செழியன், என்.ஜம்புலிங்கம், ஆர்.ஜி.மாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News