உள்ளூர் செய்திகள்
ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

Published On 2022-05-17 15:07 IST   |   Update On 2022-05-17 15:07:00 IST
ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஈரோடு:

ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்


தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் இன்று ஈரோடு தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில தலைவர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார்.

மருத்துவ காப்பீடு திட்டத்தில் நிலுவையில் உள்ள 20 ஆயிரம் மனுக்கள் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் 70 வயது மேற்ப்பட்ட ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்கியது போல் 3 சதவீத அகவிலைப்படி முன்தேதியிட்டு வழங்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியர் நீண்டநாள் நிலுவை கோரிக்கைகளை தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News