உள்ளூர் செய்திகள்
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
சிவகிரி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சிவகிரி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த அம்மன் கோவில் ஆயக்காடு பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 38). இவரது மனைவி தங்காத்தாள். நடராஜ் தேங்காய் உரிக்கும் வேலை பார்த்து வந்தார். மேலும் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடராஜ் வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். சம்பவத்தன்று இரவு வயிற்று வலி அதிகமாக இருப்பதாக நடராஜ் கூறினார். பின்னர் நடராஜ் அவரது மனைவி அனைவரும் தூங்க சென்று விட்டனர். நள்ளிரவு அவரது மனைவி கழிப்பறைக்கு வந்தபோது நடராஜ் கழிப்பறையில் மயங்கி கிடந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு நடராஜ் விஷம் அருந்தி உள்ளதால் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.