உள்ளூர் செய்திகள்
வடமாநில வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
பெருந்துறை அருகே வடமாநில வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே வடமாநில வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேற்குவங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்தவர் அசரப்அலிமுல்லா (வயது 28). இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் பெருந்துறை அருகே உள்ள பணிக்கும்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஈரோடு ரோடு, வாய்க்கால் மேடு அருகே உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரில் வீடு கட்டுவது தொடர்பாக அவருக்கும் அவரது தம்பி மற்றும் குடும்பத்தாருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மனைவி மற்றும் மகளை மேற்கு வங்க மாநிலத்திற்கு அனுப்பினார். அசரப்அலிமுல்லா மட்டும் பணிக்கம்பாளையத்தில் தங்கியிருந்து கொண்டு வேலைக்கு சென்று வந்தார்.
குடும்ப பிரச்சனை அதிகமாகவே மன உளைச்சலுடன் காணப்பட்டு இருந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்க சென்றவர் காலை வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அசரப்அலிமுல்லா வீட்டிற்குள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உடனடியாக பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.