உள்ளூர் செய்திகள்
பலியான விசுவநாதன்.

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2022-05-17 14:45 IST   |   Update On 2022-05-17 14:45:00 IST
டி.என்.பாளையம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் அண்ணா வீதியை சேர்ந்தவர் சடையப்பன். இவரது மனைவி பாப்பாத்தி (70). இவரது வீட்டிற்கு மின் கம்பத்தில் இருந்து வீடு வரை உள்ள மின்சார வயர்கள் முழுமையாக பழுதடைந்ததால் மின் இணைப்பு துண்டிக்க ப்பட்டது.

இதுகுறித்து பாப்பாத்தி டி.என்.பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்த நிலையில், பழுதடைந்த மின்சார வயர்களை அகற்றிவிட்டு புதிய வயர்களை பொருத்துவதற்காக கொங்கர்பாளையம் பகுதி மின்வாரிய வயர்மேன் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (43), அம்மாப்பேட்டை பி.கே.புதூரை சேர்ந்த விசுவநாதன் (32) ஆகியோர் கொங்கர்பாளையம் சென்றனர்.

பின்னர் கொங்கர்பாளையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டித்து விட்டு 2 பேரும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது 3 வயர்களை இணைப்பு கொடுத்தவுடன் சக்திவேல் டிரான்ஸ்பார்மரை இயக்க செல்லும் முன்பு விரைவில் மின் இணைப்பை கொடுத்து விட்டு கீழே இறங்குமாறு விசுவநாதனிடம் கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது.

அப்போது ஸ்வநாதனும் சிறிது நேரத்தில் இணைப்பு கொடுத்து விடுவதாகவும், சிறிது நேரத்திற்கு பிறகு மின் இணைப்பை வழங்கலாம் என கூறி விட்டு மின் கம்பத்தின் மீது நின்று வேலை செய்து கொண்டு இருந்துள்ளார்.

அதனை தொடர்ந்து விஸ்வநாதன் மின் கம்பத்தில் இருந்து கீழே இறங்கி விட்டதாக நினைத்த சக்திவேல், டிரான்ஸ்பார்மரை ஆன் செய்தார். இதில் மின்கம்பத்தில் வேலை செய்து கொண்டு இருந்த விஸ்வநாதன் மின்சாரம் தாக்கியதில் மின் கம்பத்தில் இருந்த கம்பிகள் மீதே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

இதை பார்த்து கொண்டு இருந்த பாப்பாத்தி, விஸ்வநாதன் மின்சாரம் தாக்கி சுருண்டு விழுவதை பார்த்து சத்தம்போட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து வயர்மேன் சக்திவேலிடம் இது குறித்து கூறி மின்சாரத்தை துண்டித்தனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்த பங்களாப்புதூர் போலீஸ்  இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மின் கம்பத்தில் சடலமாக தொங்கி கொண்டு இருந்த விஸ்வநாதனின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News