உள்ளூர் செய்திகள்
காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்.

பழுதான பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க வலியுறுத்தல்

Published On 2022-05-16 16:06 IST   |   Update On 2022-05-16 16:06:00 IST
தாளவாடியில் பலத்த மழை எதிரொலி பழுதான சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி:

தாளவாடியில் பலத்த மழை எதிரொலி பழுதான சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தாளவாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக மழை கொட்டி வருகிறது. இதனால் விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கி நின்று விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குளம், குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை நீர் அனைத்தும் கர்நாடக மாநிலம் கோலார் அணைக்கு செல்கிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில்   தூரல் மழையாக ஆரப்பித்து 2 மணி நேரம்  பலத்த  மழை பெய்தது  தாளவாடி, தொட்டகாஞ்சனூர், சிக்கள்ளி, பாலப்படுக்கை,இக்களூர், நெய்தாளபுரம் மற்றும் வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. 

இந்த மழையால் ஒடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாளவாடி இருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கள்ளி அருகே உள்ள தரை பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். 

பின்னர் வெள்ள நீர் வடிந்த பின்னர் சென்றனர். காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்ற போது அங்குள்ள தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News