உள்ளூர் செய்திகள்
வயலூர் கிராமத்தில் பெரியாண்டவர் கோவில் திருவிழா காட்சி

வயலூர் கிராமத்தில் பெரியாண்டவர் கோவில் திருவிழா

Published On 2022-05-16 15:07 IST   |   Update On 2022-05-16 15:07:00 IST
வயலூர் கிராமத்தில் பெரியாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்றது.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த வயலூர் கிராமத்தில் பெரியாண்டவர் திருவிழா நடந்தது.51 அடி அளவில் களிமண்ணால் பெரியாண்டவர் சாமி சிலைசெய்து வர்ணம் பூசி சிலையை சுற்றி 108 கலசம் வைத்து. பெரியாண்டவரை வ–ர்ணித்து பம்பை உடுக்கை அடித்து பெரியாண்டவருக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் ஆடு, கோழி, பலியிட்டு குறி கேட்டனர். 

பெரிய ஆண்டவருக்கு பல்வேறு மூலிகைகள் மூலம் அபிஷேகம் செய்தனர்.பின்னர்விரதம் இருந்த பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து தலையில் சுமந்தவாறு. ஊர்வலமாக வந்தனர்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை பெரியவர்கள், விழாக் குழுவினர், இளைஞர்கள், செய்திருந்தனர்.

Similar News