உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

Published On 2022-05-16 15:03 IST   |   Update On 2022-05-16 15:03:00 IST
பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை:

பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெருந்துறை கோவை மெயின் ரோடு கருக்கன்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி செல்லம்மாள் (74). இவர்களது மகள் வசந்தாமணி (57). தாய் மற்றும் மகள் இருவரும் கோவை மெயின் ரோட்டில் இருந்து கருக்கன்காட்டூர் செல்வதற்காக ரோட்டோரம்  நின்று கொண்டிருந்தனர்.

 அப்போது கோவையில் இருந்து பெருந்துறை வழியாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. 

இதில் செல்லம்மாள் மற்றும் வசந்தாமணி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 அங்கு சிகிச்சை பலனின்றி செல்லம்மாள் இறந்தார். வசந்தாமணி மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News