உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

சூதாட்ட பிராந்தியமாக ஏனாம் மாறி வருகிறது: அ.தி.மு.க. குற்றச்சாட்டு

Published On 2022-05-16 14:40 IST   |   Update On 2022-05-16 14:40:00 IST
சூதாட்ட பிராந்தியமாக ஏனாம் மாறி வருகிறது என்று அ.தி.மு.க. குற்றச்சாட்டியுள்ளது.
புதுச்சேரி:

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் ஒரு சிலர் அரசிடம் உரிமம் பெற்று தொடர்ந்து சூதாட்டம் நடந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும். ஏனாமில் அரசிடம் அனுமதி பெற்று மிகப்பெரிய சூதாட்ட கிளப்பை சிலர் நடத்தி வருகின்றனர். 

இங்கு ஒரு நாளைக்கு ரூ.5 கோடி அளவுக்கு சூதாட்டம் நடக்கிறது. பொதுமக்கள் புகாரின்பேரில் அந்த கிளப்புக்கு சீல் வைத்து 36 பேர் மீது புதுவை போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.  கிளப்புக்கு அனுமதி கொடுத்த அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். 

ஏனாம் சூதாட்ட பிராந்தியமாக மாற்ற ப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
முதல்-அமைச்சர், கவர்னரிடம் அ.தி.மு.க. சார்பில் மனு அளிப்பதோடு, கட்சித்தலைமை அனுமதி பெற்று ஏனாமில் போராட்டம் நடத்தப்படும். 

இதேபோல புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து மனமகிழ் மன்றங்களையும் ஆய்வு செய்து, சூதாட்டத்தை தடுக்க வேண்டும். மசாஜ் சென்டருக்கு அனுமதி கொடுக்க கூடாது. ஸ்பா, மசாஜ் கிளப் மூலமாகத்தான் தவறான செயல்கள் நடக்கிறது. விபச்சாரமும் நடக்கிறது. இவற்றின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News