உள்ளூர் செய்திகள்
அணிகலன்கள்

யானை தந்தத்தால் ஆன அணிகலன்கள் கண்டெடுப்பு

Published On 2022-05-15 11:35 GMT   |   Update On 2022-05-15 11:35 GMT
வெம்பக்கோட்டை அருகே நடந்து வரும் அகழாய்வில் யானை தந்தத்தால் ஆன அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டன.
சிவகாசி

விருதுநகர் மாவட்டம்  வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் அருகில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த அகழாய்வில் முன்னதாக சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளை யல்கள், சுடுமண்ணால், விலை உயர்ந்த சூதுபவளம் மண்பானைகள் சுடு மண்ணால் செய்யப்பட்ட மண் கிண்ணங்கள், மண் குடம், புகை பிடிக்கும் கருவி, சில்லு வட்டுகள், சங்கி னால் செய்யப்பட்ட விளை யாட்டு பொருட்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடு மண் அகல் விளக்கு கண்டறியப் பட்டது, 

இந்நிலையில் நேற்று நடந்த அகழாய்வின்போது அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன் மற்றும் சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் ஆகிய அணிகலன்கள் கண்டறியப்பட்டுள்ளது. யானை தந்ததால் செய்யப்பட்ட அணிகலன் 5சென்டி மீட்டர் நீளமும், 0.8 சென்டி மீட்டர் விட்டமும், 61 கிராம் எடை கொண்டதாக உள்ளது, அதே போல் சுடுமண் தொங்கட்டான் 2.2 சென்டி மீட்டர் நீளமும், 1.01 சுற்றளவும் 65 கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. 

தற்பொழுது கண்டறியப்பட்ட இரு அணிகலன்கள் மூலம் தொன்மையான மனிதர்கள் சுடுமண் பொருட்களை பல்வேறு வகையில் பயன்படுத்தி உள்ளதும் பெண்கள் அணி கலங்களை அழகிய வடிவில் பயன்படுத்தி உள்ளது வியப்பை ஏற்படுத்தி யுள்ளது.

அகழாய்வுகளில் திறக்க ப்படாமல் மிகுந்த அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய எட்டு மணி மணிகள் கிடைத்துள்ளன. அதனை ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் நாளை திறக்கப்படுவதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர், இணை இயக்குனர் பரத்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News