உள்ளூர் செய்திகள்
சேத்துப்பட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
சேத்துப்பட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
சேத்துப்பட்டு,
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எட்டி வாடி, திருமலை, வடமாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கிருந்து சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில் ஊராட்சி செயலாளர் களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரதாப், ஊரக வளர்ச்சி பணிகள் குறித்து ஊராட்சி செயலாளர்களிடம் கேட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சி உதவி பொறியாளர் கோவர்தனன், ஊராட்சிகளில் மாவட்ட செயலர் அறவாழி, ஒன்றியக்குழு தலைவர் ராணி அர்ஜுனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகோபால், சத்தியமூர்த்தி ஒன்றிய பொறியாளர் மனோகரன், மாதவி, ஜெயந்தி, பணி மேற்பார்வையாளர்கள் பாலாஜி, ஜெயவேலு, சாந்தி, மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உட்பட உடனிருந்தனர்.