உள்ளூர் செய்திகள்
கொள்ளை

பல்லடம் அருகே கேரள பெண் மந்திரவாதியை கட்டிப்போட்டு நகை பணம் கொள்ளை

Published On 2022-05-15 11:22 IST   |   Update On 2022-05-15 11:22:00 IST
திருமண தோஷம் கழிக்க வந்த வாலிபர், கேரள பெண் மந்திரவாதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச சேர்ந்தவர் விமலாதேவி (வயது 58). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் தங்கியிருந்து ஜோதிடம், மாந்திரீகம் போன்றவற்றை செய்து வருகிறார். சம்பவ த்தன்று இவரது வீட்டிற்கு வந்த ராஜேஷ் (40) என்பவர் திருமண தோஷம் கழிக்க மந்திரித்து கயிறு கட்டுமாறு கூறியுள்ளார்.

அப்போது வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட ராஜேஷ் விமலாதேவியின் வாயில் துணியை திணித்ததுடன், அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்து கை, கால்களை கயிறால் கட்டிப்போட்டு உள்ளார்.

பின்னர் விமலாதேவி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகள், பீரோவில் இருந்த ரூ. 7 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு அங்கி ருந்து ராஜேஷ் தப்பி சென்று விட்டார்.

பல மணி நேரம் கட்டிப்போடப்பட்டிருந்த விமலாதேவி மயக்க மடைந்தார். இதனிடையே நீண்டநேரமாக அவர் வெளியே வராததால் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது விமலாதேவி மயக்கமடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் விமலா தேவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசில் விமலாதேவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையில் ஈடு பட்ட ராஜேசை தேடி வரு கின்றனர்.

Similar News