உள்ளூர் செய்திகள்
செயல்படாத அரசு மருத்துவமனை

செயல்படாமல் உள்ள எக்ஸ்ரே பிரிவால் நோயாளிகள் வேதனை

Published On 2022-05-14 11:27 GMT   |   Update On 2022-05-14 11:27 GMT
அரசு மருத்துவமனையில் செயல்படாமல் உள்ள எக்ஸ்ரே பிரிவால் நோயாளிகள் வேதனை அடைகின்றனர்.
வத்திராயிருப்பு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்று வட்டார கிராம பகுதிக ளுக்கு தலைமை மருத்துவமனையாக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை  உள்ளது. இந்த மருத்துவமனையில்  வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாப்பட்டி,நெடுங்கு ளம், கொடிக்குளம்,சேது நாராயணபுரம், பட்டுப்பூ ச்சி, சுந்தரபாண்டியம்,  மகாராஜபுரம், தம்பிபட்டி,மேலக்கோபாலபுரம்உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளியாக வந்து சிகிச்சை பெற்று சொல்கின்றனர்.

இந்த மருத்துவமனை  92 படுக்கைகள் கொண்டு உள்ளது. 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விபத்தில் காயமடையும் நோயாளிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவந்து இந்தமருத்துவமனையில்  தான் முதலுதவி சிகிச்சை கொடுக்கப்படுகிறது. மேலும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டால் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகின்றனர்.

இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுப்பதற்கு 7 ஆண்டுகளுக்கு மேலாக பணியாளர்கள் இல்லாததால் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வரும்  நோயாளிகள் எக்ஸ்ரே எடுக்க முடியாத நிலை உள்ளது.அத்துடன் எக்ஸ்ரே கருவியும்  தற்போதுள்ள நவீன கருவியாக இல்லை.எக்ஸ்ரே பிரிவிற்கு பணியா ளர்கள் இல்லாததால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் வெளியே உள்ள தனியார் எக்ஸ்ரே நிலையத்திற்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவழித்து எக்ஸ்ரே எடுக்கும் சூழ்நிலை உள்ளது.

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணியாளர்கள் 5  பேர் பணி செய்யக்கூடிய இடத்தில் ஒருவர், இருவர் மட்டுமே பணியில் உள்ளனர். தற்போது வரை தூய்மை பணியாளர்கள்  நியமனம் செய்யாமல் இருப்பதால் வெளி நபர்களை வைத்து மருத்துவமனையில் தூய்மை பணி செய்யப்பட்டு வரு கிறது.மேலும் இந்த அரசு மருத்துவமனைக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் இரவு காவலாளி இல்லாத தால் இரவு நேரங்களில் வெளி ஆட்கள் யார் வந்து செல்கிறார்கள் என்று கண்காணிக்க முடியாத நிலையும் உள்ளது.

வத்திராயிருப்பு தாலுகாவாக அறிவிக்கப்ப ட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த அரசு மருத்துவமனையின்  தரம் உயர்த்தப்படாமல் இருப்பதால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும் உடனடியாக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களும்,நவீன எக்ஸ்-ரே கருவியும் அமைத்துக்கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News