உள்ளூர் செய்திகள்
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 2 பேர் சஸ்பெண்டு
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மேலாளர் உள்பட 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட துணைப்பதிவாளர் (பால்வளம்), விருதுநகர் சரக கட்டுப்பாட்டில் உள்ள ஆர்.56 ராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கணக்குகள் திடீர் ஆய்வு செய்யப்பட்டது.
அதில் அதிக கையிருப்பு தொகை வைத்திருந்தது மற்றும் ரொக்க சிட்டாவின்படி ரூ.6 லட்சத்து 24 ஆயிரத்து 415.20 கையிருப்பு தொகை குறைவாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கையிருப்பு குறைவுக்கு காரணமான காசாளர் வேல்முருகன் மற்றும் கையிருப்பு குறைவை கண்டறிந்து தடுக்க தவறிய சங்க மேலாளர் (பொறுப்பு) தங்கமாரியப்பன் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து விருதுநகர் துணை ப்பதிவாளர் (பால்வளம்) உத்தரவிட்டுள்ளார்.