உள்ளூர் செய்திகள்
வாடிவாசல் அமைக்கும் பூமி பூஜையில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பேசினார்.

சமத்துவ ஜல்லிக்கட்டு

Update: 2022-05-14 10:50 GMT
ராமநாதபுரம் அருகே 50 ஆண்டுகளுக்கு பிறகு சமத்துவ ஜல்லிக்கட்டு நடந்தது.
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தாதனேந்தல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் அமைந்துள்ளது.  இந்த கோவிலின் அருகே உள்ள மைதானத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.  அதன் பின் தற்போது வருகிற மே 25-ந்தேதி சமத்துவ ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற உள்ளது.

இதையொட்டி சாத்தார் உடையார் அய்யனார் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

அதனைத்தொடர்ந்து முதற்கட்ட பணியான வாடிவாசல் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. அதனை சட்டமன்ற உறுப்பி னர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம், ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரன், களஞ்சியம் பவுண்டேசன் நிறுவனர் வெங்கட்ராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

இந்த விழாவில் 30-க்கும் அதிகமான கிராம ங்களை சேர்ந்த கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதற்கான ஏற்பாடுகளை சமத்துவ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் செய்திருந்தார். 

பின்னர் பாத்தியப்பட்ட அனைத்து கிராம பொது மக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு, எருதுகட்டு, வடமாடு உரிமையாளர்கள் நல சங்க நிர்வாகிகள் விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

Tags:    

Similar News