உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது

ராமசாணிக்குப்பம் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு இலவச திருக்குறள் புத்தகம்

Published On 2022-05-14 16:00 IST   |   Update On 2022-05-14 16:00:00 IST
ராமசாணிக்குப்பம் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு இலவச திருக்குறள் புத்தகங்களை தலைமை ஆசிரியர் வழங்கினார்.
கண்ணமங்கலம் :

கண்ணமங்கலம் அருகே ராமசாணிக்குப்பம்– ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று அரசு பள்ளியில்   5-ம் வகுப்பு படிக்கும் 59 மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. 

இதனை பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வி, அவரது கணவர் சமூக ஆர்வலர் க.பிரபாகரன் மாணவர்களுக்கு பிரியா விடை அளித்து உலகம் போற்றும் திருவள்ளுவரின் பெருமைகளையும் அவர் எழுதிய திருக்குறளின் பெருமையும் எடுத்து கூறி அனைவருக்கும் திருக்குறள் அதன் கருத்துக்கள் உள்ள புத்தகம் பரிசளித்தனர்.மாணவச்செல்வங்களும் நாங்கள் 1330 திருக்குறள்களையும் மனதில் பதியுமாறு திருக்குறள் அதன் கருத்துக்கள் அனைத்தையும் படிப்பதாக உறுதி கூறினார்கள். 

5-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நட்டனர்.தலைமை ஆசிரியர், பெற்றோர்கள், ஆசியர்கள், அனைவரும் இணைந்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இடைநிலை ஆசிரியர் சுமதி, ஆசிரியர்கள் வனிதா, ஜெயந்தி, துர்கா, பவானி ஆகியோர் இணைந்து 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியாக பிரியா விடை அளித்தனர்.

Similar News