உள்ளூர் செய்திகள்
சென்னிமலை சென்கோப்டெக்ஸ் கைத்தறி சங்கத்தில் அரசு செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணி நூல் ஆணையர் வள்ளலார்

கைத்தறி துறை செயலாளர், துணி நூல் ஆணையர் ஆய்வு

Published On 2022-05-14 15:45 IST   |   Update On 2022-05-14 15:45:00 IST
சென்னிமலை பகுதி கைத்தறி சங்கத்தில் கைத்தறி துறை செயலாளர், துணி நூல் ஆணையர் ஆய்வு செய்தனர்.
சென்னிமலை:

சென்னிமலை பகுதி கைத்தறி சங்கத்தில் கைத்தறி துறை செயலாளர், துணி நூல் ஆணையர் ஆய்வு
செய்தனர்.

சென்னிமலையில் செயல்படும் சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 600 உறுப்பினர்கள் கைத்தறி தொழிலில் ஈடுபட்டு பெட்ஷீட், படுக்கை விரிப்புகள், ஏற்றுமதி இரகங்கள், துண்டுகள் மற்றும் தலையணை உறை உள்ளிட்ட கைத்தறி ரகங்களை  நெசவு செய்து வருகின்றனர். 

இந்த சென்கோப்டெக்ஸ் சங்கத்திற்கு கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ 1.20 கோடி மதிப்பில் சென்னிமலையில் கட்டி முடிக்கப்பட்ட  நவீன காட்சியறையுடன் கூடிய சரக்கு இருப்பு கட்டிடத்தை அரசு செயலாளர்  தர்மேந்திர பிரதாப் யாதவ், துணி நூல் ஆணையர் எம்.வள்ளலார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். 

மேலும்,  சங்க தொழிற்கூடத்தில் நெசவு நெய்து வரும் நெசவாளர்க–ளிடம் குறைகளை கேட்டறிந்தர். இச்சந்திப்பின் போது நெசவாளர்கள் தங்களுக்கு வாரம் ஒரு முறை நெசவு கூலியினை ரூ 1500-க்கு மேற்பட்ட கூலியை வங்கியில் செலுத்து முறையை மாற்றி  வாரம் இரண்டு முறை ரொக்கமாக வழங்க வேண்டும், முதியோர் ஓய்வூதிய தொகை கால தாமதம் இன்றி மாதம் இரண்டாயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆண்டு முழுவதும் பள்ளி சீருடை ரகத்தை உற்பத்தி செய்ய அனுமதி அளிக்க வேண்டும். 

கோ–ஆப்டெக்ஸ் மூலம் சங்க ஜவுளிகளை அதிகம் கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். 
இந்த சந்திப்பின் போது கலெக்டர் கிருஷ்ணண்ணுண்னி,  கைத்தறி உதவி இயககுனர் சரவணன், துணி நூல் துறை அதிகாரிகள், உதவி இயக்குநர் ஈரோடு மாவட்ட கைத்தறி துறை அதிகாரிகள், சங்க தலைவர் திருநாவுகரசு, மேலாண்மை இயக்குநர் நடராஜன், ஆகியோர் உடனிருந்தனர்.

 சென்கோப்டெக்ஸ் சங்கத்தினை பார்வையிட்ட அதிகாரிகள் காளிக்கோப் டெக்ஸ் சங்கத்திலும் புதிய கட்டிடத்தினையும், புதிய வடிவமைப்புகளையும் பார்வையிட்டனர்.

Similar News