உள்ளூர் செய்திகள்
அந்தியூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

Published On 2022-05-14 15:40 IST   |   Update On 2022-05-14 15:40:00 IST
அந்தியூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
அந்தியூர்:

அந்தியூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

அந்தியூர் பேரூராட்சி பகுதிகளில் 18 வார்டுகள் உள்ளது. மேலும் பஸ் நிலையம் பகுதியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, சென்னை பேரூராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில் வாரத்தில் 2-வது சனிக்கிழமை மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் ஒருங்கிணைந்த சுகாதார பணிகள் பேரூராட்சி பகுதிகளில் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து இன்று அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், செல்லீஸ்வரர் கோவில், அழகுராஜ பெருமாள் கோவில் பஸ் நிலையம் ரவுண்டானா பகுதி, தாலுகா அலுவலகம், தவிட்டுபாளையம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியினை செய்தனர்.

இதனைத்தொடர்ந்து அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம். மஞ்சள் பையை பயன்படுத்துவோம். சுற்று ச்சூழலை பாதுகாப்போம். நாம் வசிக்கின்ற பகுதியை தூய்மையாக வைத்து கொள்வோம். மரம் நடுவோம், மழை பெறுவோம் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த சைக்கிள் பேரணி நடந்தது.

இதில் துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி, சாந்தம் முகமது மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News