உள்ளூர் செய்திகள்
20 அடி பள்ளத்தில் கீழே விழுந்து வாலிபர் பலி
பவானிசாகர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து 20 அடி பள்ளத்தில் கீழே விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து 20 அடி பள்ளத்தில் கீழே விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானிசாகர் அருகே உள்ள புங்கார் காலனியை சேர்ந்தவர்கள் கவுரி சங்கர் (19), ரங்கசாமி (19). கட்டிட கூலி வேலை செய்து வருகிறார்கள்.
நேற்று இரவு 10 மணி அளவில் வேலை முடிந்து கவுரி சங்கர், ரங்கசாமி ஆகியோர் ேமாட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். அப்போது அவர்கள் கொத்தமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் டிபன் வாங்கிக் கொண்டு பவானிசாகர்-பண்ணாரி சாலையில் காமராஜர் நகர் பாலத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வேகமாக ஒரு கார் வந்தது.
இதை பார்த்த கவுரிசங்கர், ரங்கசாமி ஆகியோர் கார் நம் மீது மோதி விடும் என்று கருதி பாலத்தில் இருந்து 20 அடி ஆழ பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் கீழே குதித்தனர்.
இதில் அவர்கள் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக 2 பேரையும் மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்க கவுரிசங்கரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து–விட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த ரங்க–சாமியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.