உள்ளூர் செய்திகள்
கதிரேசன்.

3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 60 ஆண்டு சிறைத்தண்டனை - திருப்பூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

Published On 2022-05-13 10:47 GMT   |   Update On 2022-05-13 10:47 GMT
கடந்த ஆண்டு மார்ச் 10-ந்தேதி உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது அங்கு இருந்த 2 சிறுமிகள்(சகோதரிகள்) மற்றும் மற்றொரு சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்.
திருப்பூர்:

திருப்பூர் பழவஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 46). கூலித் தொழிலாளி. கடந்த ஆண்டு மார்ச் 10-ந்தேதி உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது அங்கு இருந்த 2 சிறுமிகள்(சகோதரிகள்) மற்றும் மற்றொரு சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். 

இது தொடர்பாக சிறுமிகளின் பெற்றோர், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து கதிரேசனை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நாகராஜன் தீர்ப்பளித்தார். அதில் 3 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த கதிரேசனுக்கு 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்தார். இதையடுத்து கதிரேசன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பி. ஜமிலாபானு ஆஜரானார்.
Tags:    

Similar News