உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

Published On 2022-05-13 15:22 IST   |   Update On 2022-05-13 15:22:00 IST
தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற வரும்  25-ந்  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.2,000 பெற்று வரும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தொடர்ந்து பெற்றிட ஏதுவாக மாற்றுத்திறனாளி களுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்க மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை நகல், முகம் மட்டும் தெரியகூடிய புகைப்படம் 1 (பாஸ்போர்ட் சைஸ்) ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன்  

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தரைத்தளம், அறை எண்: 17, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளை சார்ந்த எவரேனும் நேரில் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

Similar News