உள்ளூர் செய்திகள்
கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ரூ.95 லட்சத்தில் புதிதாக ராஜகோபுரம்
கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ரூ.95 லட்சத்தில் புதிதாக ராஜகோபுரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் புதிய ராஜகோபுரம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.95 லட்சம் ஓதுகீடு செய்யப்பட்டுள்ளது.
கோவில் அருகே கொளத்தூர் ஏரி உள்ளதால் தண்ணீர் நிரம்பிய நிலையில் பணிகள் காலதாமதம் ஆனது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் புதிய ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது என கோயில் விழாக்குழுவினர் தெரிவித்தனர்.