உள்ளூர் செய்திகள்
வேலை வாய்ப்பு முகாம்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Published On 2022-05-12 16:21 IST   |   Update On 2022-05-12 16:21:00 IST
மதுரையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
மதுரை

மதுரை கே.புதூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை (13-ந் தேதி) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. 

இதில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு,  முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம்.

 இதற்காக அவர்கள் தங்களின் விவரங்களை http://www.tnprivatejobs.tn.gov.in என்ற  இணையதளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோர் கல்விச்சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை மற்றும் போட்டோவுடன் கோ.புதூரில் உdrar மாவட்ட வேலைவாய்ப்பு மையத்துக்கு நேரில் வரவேண்டும். 

தனியார் நிறுவனத்தில் வேலை பணி நியமனம் பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எதுவும் பாதிக்காது.

மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் (மு.வ.பொ) தெரிவித்து உள்ளார்.

Similar News