உள்ளூர் செய்திகள்
அரசு வாகன பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரை
மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மோட்டார் பராமரிப்பு ஊழியர் சங்கம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் நடராஜன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராஜராஜேஸ்வரன் மற்றும் கிளை செயலாளர்கள் கருணா நிதி, கஜேந்திரன் உள்பட 100-க்கும் மேற்ப ட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் “காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மத்திய அரசுக்கு இணையாக சம்பள உயர்வு வழங்க வேண்டும், மோட்டார் உதிரிபாகங்களை ஒட்டு மொத்தமாக கொள்முதல் செய்து வழங்க வேண்டும்,
உயர் பதவிகளை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பக் கூடாது. தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பணிமனையில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,
காவலர் மற்றும் துப்புரவாளர்களுக்கு சீருடை வழங்க வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மோட்டார் பராமரிப்பு ஊழியர் சங்க நிர்வாகிகள் அஞ்சல் அட்டையில் கோரிக்கை களை எழுதி, தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.