உள்ளூர் செய்திகள்
கோவில் கதவை உடைத்து தங்க தாலி திருட்டு
கோவில் கதவை உடைத்து தங்க தாலி திருட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் ஓமலூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டி மண்குப்பம் பகுதியில் கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்து கோவிலை பூட்டிவிட்டு சென்றனர்.
இதையடுத்து நேற்று காலை பூசாரி அங்கு வந்து பார்த்தபோது கோவில் கதவு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்தார். அங்கு அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க தாலி செயின் மாயமாகி இருந்தது.
இந்த நகையை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கோவிலில் நிர்வாகி வையாபுரி (வயது 73) கருப்பூர் போலீசில் புகார் செய்தார் .
போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.