உள்ளூர் செய்திகள்
தீ விபத்தில் பாதிக்கபட்ட குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

மின்கசிவால் தீயில் எரிந்து நாசமான கூரை வீடு

Published On 2022-05-11 15:08 IST   |   Update On 2022-05-11 15:08:00 IST
வேதாரண்யத்தில் மின்கசிவால் கூரை வீடு தீயில் எரிந்து நாசமானது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா வண்டுவஞ்சேரி ஊராட்சி வெள்ளி கிடங்கு பகுதியில் வசிப்பவர்  ரத்தினசாமி (63)  நேற்று இவர் வீட்டில் இருந்த போது எதிர்பாராத விதமாக மின் கசிவின் காரணமாக கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

 மேலும் வாய்மேடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின்பேரில் வந்த வாய்மேடு தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி மற்றும்  தீயணைப்பு அலுவலர்கள் வீட்டில் மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.

இதில் வீட்டிலுள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது வீட்டின் சேத மதிப்பு ரூபாய் 75 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது இது குறித்து வாய்மேடு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
 
சம்பவ இடத்திற்குவந்த கூட்டுறவு வங்கி இயக்குனர் உதயம் முருகையன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி குமார், ஒன்றிய குழு உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் வீட்டிற்கு தேவையான காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களையும் நிதியுதவியும் வழங்கினர்.

Similar News