உள்ளூர் செய்திகள்
ஊதியம் வழங்காததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவமனையில் ஊதியம் வழங்காததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டன
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஊதியம் வழங்காததை கண்டித்து அரசு மருத்துவமனை பணிபுரியும் தனியார் தூய்மைப்
பணியாளர்கள் வேலையை புறக்கணித்தும் தனியார் நிறுவனத்தின் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் 36 தூய்மைப் பணியாளர்கள் தனியார் நிறுவனம் மூலம் பணிக்கு அமர்த்தப்பட்டு பணி செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஏப்ரல் மாதம் ஊதியம் வழங்கப்பட வில்லை. இதைத் தொடர்ந்து ஊதியம் வழங்காததை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் வேலையை புறக்கணித்தும், தனியார் நிறுவனத்தின் வாகனத்தை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா சம்பந்தப்பட்ட கம்பெனி பேசி சம்பளம் பெற்று தருவதாக உறுதி அளித்ததார். இைதத் தொடர்ந்து துப்புரவு பணிகள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.