உள்ளூர் செய்திகள்
பழுதாகி நின்ற டவுன் பஸ்சை படத்தில் காணலாம்.

பாலக்கோடு அருகே நடுரோட்டில் பழுதாகி நின்ற டவுன் பஸ்

Published On 2022-05-10 10:58 GMT   |   Update On 2022-05-10 10:58 GMT
பாலக்கோடு அருகே நடுரோட்டில் பழுதாகி நின்ற டவுன் பஸ்சால்மாணவ, மாணவிகள் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
பாலக்கோடு, 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 100க்கும் மேற்பட்ட புறநகர் மற்றும் நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

பெரும்பாலான பேருந்துகள் அரசு நிர்ணயிக்கப்பட்ட  7 லட்சம் கிலோ மீட்டர் கடந்து  இயக்கப்பட்டு வருவதால் ஆங்காங்கே நடுரோட்டில் பள்ளி, அலுவலக நேரங்களில் அரசு பேருந்துகள் பழுதாகி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.  

நேற்று மாலை பாலக்கோட்டிலிருந்து  திம்மம்பட்டி, சர்க்கரை ஆலை, வெள்ளிச்சந்தை, கொலசனஹள்ளி, புதூர் வழியாக மாரண்டஅள்ளி செல்லும் எண் 3 கொண்ட நகரப் பேருந்து  பனந்தோப்பு நெடுஞ்சாலையில்   பழுதாகி நடுவழியில் நின்றது. 

இதனால் பள்ளி, கல்லூரி  மாணவ மாணவிகள் பொதுமக்கள் என சாலையில் ஒரு மணி நேரம் மாற்று பேருந்துக்காக காத்து கிடந்தனர்.  பின்பு மாற்று பேருந்தில் பயனிகளை அனுப்பி வைக்க ப்பட்டனர்.

 எனவே தமிழக அரசு பழுதான பழைய பேருந்துகளை நிறுத்தி விட்டு புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News