உள்ளூர் செய்திகள்
தருமபுரி பஸ்நிலையத்தில் பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த ஏர்ஹாரன்களை அகற்றப்பட்டது.

அதிக ஒலி எழுப்பிய தனியார் பஸ்களில் 230 ஏர் ஹாரன்கள் அகற்றம்- தருமபுரி ஆர்.டி.ஓ அதிரடி நடவடிக்கை

Published On 2022-05-10 10:56 GMT   |   Update On 2022-05-10 10:56 GMT
தருமபுரியில் பஸ்களில் நடந்த சோதனையில் அதிக ஒலி எழுப்பிய 230 ஏர்ஹான்கள் அகற்றப்பட்டது.
தருமபுரி,

தனியார் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பொருத்தப்பட்டு இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பஸ்களில் பொருத்தியுள்ள அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

 இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பஸ் ஸ்டாண்ட் சுங்க சாவடிகளில் வாகன தணிக்கையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஈடுபட்டனர்.
 அதன்படி தருமபுரி பஸ் ஸ்டாண்ட், மேட்டுப்பட்டி, தொப்பூர் மற்றும் சேலம் உள்பட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் வகையில் பொருத்தப்பட்டிருந்த 230 ஏர்ஹாரன்கள்களை அகற்றினர். இதைத்தொடர்ந்து விதிமீறி இயக்கிய வாகனங்க ளிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் தருமபுரி மாவட்டம், அரூர் பஸ்நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் தலைமையில்  வாகன ஆய்வு மேற்கொண்டன். அப்போது பஸ்களில் இருந்த 20 ஏர் ஹாரன்கள் அகற்றி பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறுகையில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை அகற்ற அரசு உத்தரவிட்டது. கடந்த இரண்டு நாட்களில் நடந்த வாகன தணிக்கையில் 230 ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்யப்பட்டது. 

தொடர்ந்து இந்த வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படும். அப்போது அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பொறுத்தியிருந்தால் அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றனர்.
Tags:    

Similar News