உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி ஆனிவிஜயா ஆய்வு செய்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவில் 1000 போலீசார் பாதுகாப்பு

Published On 2022-05-10 09:30 GMT   |   Update On 2022-05-10 09:30 GMT
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது, அதேபோல் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் சனிக்கிழமையும், சிரசு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இவ்விழாவில் செய்யப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா நேற்று இரவு ஆய்வு செய்தார். குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேர் செல்லும் பாதைகள், அம்மன் சிரசு ஊர்வலமாக செல்லும் பாதைகளை ஆய்வு செய்தார். 

மேலும் கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் காலையில் சிரசு புறப்படும் முத்தாலம்மன் கோவில் வரை சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், மணிகண்டன், கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு உள்பட பலர் உடனிருந்தனர்.

தொடர்ந்து குடியாத்தம் நகர போலீஸ் நிலையத்தில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு குறித்து காவல்துறையினரிடம் ஆலோசனை நடத்தினார்.

நிருபர்களிடம் பேசிய டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறியதாவது நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம், கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் மற்றும் சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்படும். 

கெங்கையம்மன் சிரசு நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் அன்று பவுர்ணமி நாள் என்பதாலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் திருவிழா என்பதாலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பு பணியில் வேலூர் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கண்ணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

 இத்திருவிழாவில் பக்தர்கள் சிரமமின்றி அம்மனை தரிசிக்கவும், கோவிலுக்கு வந்து செல்லவும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் அதற்காக போலீஸ் சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News