உள்ளூர் செய்திகள்
வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சாந்தனுக்கு 2-வது நாளாக மருத்துவ பரிசோதனை
வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சாந்தனுக்கு 2-வது நாளாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாந்தன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சாந்தனுக்கு ரத்தம் சர்க்கரை அளவு ஈசிஜி உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. சோதனை முடிந்த பிறகு மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இன்று 2-வது நாளாக சாந்தனுக்கு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது.
இதற்காக அவரை காலை 10 மணிக்கு வேலூர் ஜெயிலில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பல் பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. 2 மணி நேர சோதனைக்குப் பிறகு சாந்தன் மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.