உள்ளூர் செய்திகள்
கலைநிகழ்ச்சியில் சிறப்பிடம் பெற்ற குழந்தைகளுக்கு பரிசு, கேடயங்கள் அமைச்சர் வழங்கிய போது எடுத்தப்படம்.

குழந்தைகளுக்கு கல்வியோடு விளையாட்டும் அவசியம் - அமைச்சர் பேச்சு

Published On 2022-05-09 15:25 IST   |   Update On 2022-05-09 15:25:00 IST
குழந்தைகளுக்கு கல்வியோடு விளையாட்டும் அவசியம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே வடகாடு ஊராட்சி புள்ளாட்சி குடியிருப்பு அரசு தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமை வசித்தார்.

விழாவில் கிராமத்தினர், பெற்றோர்களுடன், அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ.சின்னதுரை உள்ளிட்டோர் பள்ளிக்கு தேவையான பொருட்களை கல்வி சீராக மேளதாளங்கள் முழங்க எடுத்து வந்தனர்.

விழாவில், அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் பேசினார். அப்போது அவர், கொரோனா தாக்கத்தால் கல்வித்துறை உள்ளிட்ட பெரும்பா லான துறைகள் முடங்கின. ஆனால், விவசாயிகள் முடங்கவில்லை. தொடர்ந்து, உழைத்து முடங்கிய மக்களின் உணவுத்தேவைக்காக விவசாயிக ள் உழைத்தனர்.

கல்வியும், விவசாயமும் நமக்கு இரு கண்கள், அரசுப்பள்ளிகளை முன்னேற்ற அந்தந்தப்பகுதி இளைஞர்கள் முன்வரவேண்டும். நான் வறுமை நிலையில் அரசுப்பள்ளியில் பயின்றவன்தான். உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களில் பெருமாபாலானோர் அரசுப்பள்ளிகளில் பயின்றவர்கள் தான். அதனால், பெற்றோர்கள் தனியார் பள்ளி மோகத்தை தவிர்த்து அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டும்.

அரசுப்பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்த அரசு பல்வேறு திட்டங்க ளை செயல்படுத்தி வருகிறது. கல்வி எவ்வளவு அவசியமோ, அதேபோல, விளையாட்டும் உடலை சோர்வடைய விடாமல் ஆரோக்யமாக பாதுகாக்கு ம்.  அதனால், குழந்தைகளுக்கு கல்வியைப்போல, விளையாட்டும் அவசியம் என்றார்.

தொடர்ந்து, பள்ளிக் குழந்தைகளுக்கான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பிடம் பெற்ற குழந்தைகளுக்கு பரிசு, கேடயங்கள் அமைச்சர் வழங்கினார்.

Similar News