உள்ளூர் செய்திகள்
விபத்தை ஏற்படுத்திய லாரி. உடல் நசுங்கி பலியான விவசாயி.

காவேரிப்பாக்கம் அருகே லாரி மோதி விவசாயி பலி

Published On 2022-05-09 15:02 IST   |   Update On 2022-05-09 15:02:00 IST
காவேரிப்பாக்கம் அருகே லாரி மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
நெமிலி:

காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி கிராமம் புதுத்தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 70) விவசாயம் செய்து வருகிறார்.

பாகவளியில் இருக்கும் தனது சொந்த நிலத்திற்கு சென்று விட்டு பிறகு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செல்வ விநாயகர் கோவில் அருகே சாலையை கடக்க முயன்றார். 

அப்போது திருச்சி மாவட்டம் முசிறி வடுகபட்டி கிராமத்தை சார்ந்த பாலச்சந்தர் (30) என்பவர் டிப்பர் லாரியில் எம்சென்ட் மணலை ஏற்றிக்கொண்டு மிக அதிவேகமாக வந்து கொண்டிருந்தார். 

அப்போது சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த முதியவர் ராதாகிருஷ்ணன் மீது லாரி மோதியது. இதில் முதியவர் உடல் தலை ஆகிய பாகங்கள் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் ேபாலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News