உள்ளூர் செய்திகள்
மின்வேலியில் சிக்கி 5 வயது குழந்தை படுகாயம்
திருவண்ணாமலை அருகே விளை நிலத்தில் காட்டு பன்றிக்கு அமைத்த மின்வேலியில் சிக்கி 5 வயது குழந்தை மற்றும் காப்பற்ற சென்ற தந்தையும் காயம் அைடைந்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே விவசாய நிலத்தில் காட்டு பன்றிக்கு அமைத்த மின்சார வேலியில் சிக்கி 5 வயது குழந்தை படுகாயம் அடைந்தது.
திருவண்ணாமலை அடுத்த காஞ்சி ரோடு சின்னபுனல் காடு பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் தனது விளை நிலத்தில் மணிலா பயிர் செய்திருந்தார். அருகில் உள்ள காட்டிலிருந்து பன்றிகள் வந்து மணிலா பயிரை நாசம் செய்வது வாடிக்கையாக இருந்து வந்தது.
இதனை கட்டுப்படுத்த அவர் நிலத்தை சுத்தி மின்சார வேலி அமைத்தார். இரவில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு இருந்தது. தினமும் காலை நேரத்தில் அந்த மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று அந்த மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்துள்ளது.
அப்போது பக்கத்து நிலத்த சேர்ந்த சேர்ந்த பிரகாஷ் மகள் கோமதி (வயது 5) அவரது நிலத்தில் மிளகாய் பறிப்பதற்காக சென்றார்.
அப்போது செல்லும் வழியில் மணிலா பயிருக்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் அவரது கால் தெரியாமல் சிக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் ேகட்டு தந்தை பிரகாஷ் ஓடிவந்தார். அவரும் மின்வேலியில் சிக்கி காயமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
காயமடைந்த 2 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக திருவண்ணா மலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.