உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆரணி அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் 3 பெண்களிடம் செயின் பறிப்பு

Published On 2022-05-09 09:24 GMT   |   Update On 2022-05-09 09:24 GMT
ஆரணி அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் 3 பெண்களிடம் செயின் பறித்து சென்றனர்.
ஆரணி:

ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத கைலாயநாதர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. 

இதனை பயன்படுத்தி மர்ம கும்பல் விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலையின் மனைவி சாந்தா (வயது 60)  அணிந்திருந்த 2 பவுன் செயின், ஏகாபரத்தின் மனைவி சூரியகலா அணிந்திருந்த 3 பவுன் செயின், நடராஜன் மனைவி சகுந்தலா அணிந்திருந்த 3 பவுன் செயின் என மொத்தம் 8 பவுன் நகையை பறித்து சென்றனர்.

இது குறித்து 3 பேரும் ஆரணி தாலுகா போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News