உள்ளூர் செய்திகள்
மதுரை மேல மாசி வீதியில் நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிறுவன்.

சிறப்பு தடுப்பூசி முகாம்

Published On 2022-05-08 10:54 GMT   |   Update On 2022-05-08 10:54 GMT
மதுரை மாவட்டத்தில் இன்று 3400 மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.
மதுரை

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது.   மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் மீண்டும் நடத்தப்பட்டு வருகின்றன.  மதுரை மாவட்டத்தில் 29-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது.

அனைத்து வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்து வமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் தடுப்பூசி முகாம்கள் இன்று நடந்து வருகிறது.  இங்கு 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல், 2-வது, 3-வது தவணை தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.   பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு  வந்து  வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு   சென்றனர்.

இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில்,  மதுரை மாவட்டத்தில் 3,400 பகுதிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றது. இங்கு 1700 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முதல் தடுப்பூசி செலுத்திய 6 லட்சத்து 9 ஆயிரத்து 941 பேர், 2-ம் தவணை தடுப்பூசி போடவில்லை என்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களில் 37 ஆயிரத்து 354 பேர் ஊரக பகுதிகளிலும், 2 லட்சத்து 92 ஆயிரத்து 587 பேர் மாநகர பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.  சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் செய்து 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தி வருகிறோம்  என்றார்.

கொரோனா நோய் பரவல்   தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் பணிகளில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற னர். அதன்மூலம் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள், 2-ம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி போடாதவர்களையும் கண்டறிந்து, அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

பொதுமக்கள் அனை வரும் நோய்த் தொற்றில் இருந்து தப்ப வேண்டும் என்றால், 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், கூட்டமான இடங்களில் சமூக இடை வெளி கடைபிடித்தல், முக கவசம் அணிதல், பொது இடங்களுக்கு சென்று வீடு திரும்பிய பிறகு கைகளை முறையாக கழுவுதல் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்  என்று கலெக்டர் அனீஷ்சேகர் அறிவுறுத்தி உள்ளார்.  
Tags:    

Similar News