உள்ளூர் செய்திகள்
ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

கந்தர்வகோட்டையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க ஆண்டு விழா

Published On 2022-05-08 14:21 IST   |   Update On 2022-05-08 14:21:00 IST
கந்தர்வகோட்டையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க ஆண்டு விழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:

கந்தர்வகோட்டை ஓய்வுபெற்ற அலுவலர் சங்க ஆண்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  

விழாவிற்கு வட்ட கிளை தலைவர் சொக்க இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.மாவட்ட அமைப்புச் செயலாளர் தன ராசு அனைவரையும் வரவேற்றார் முன்னாள் மாநில செயலாளர்அய்யனப்பிள்ளை தொடக்க உரையாற்றினார்.

கூட்டத்தில் ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கான குறைகளையும் அரசு செயல்படுத்த வேண்டிய நல திட்டங்களையும் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் வர்த்தக சங்கத் தலைவர் பழ.மாரிமுத்து, பொருளாளர் செந்தில்குமார், கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, ஒன்றிய துணை பெருந்தலைவர் செந்தாமரை குமார், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  

கூட்டத்தில் 80-வயது நிறைவு செய்த உறுப்பினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். நிறைவாக துணைத் தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.

Similar News