உள்ளூர் செய்திகள்
ரெட் கிராஸ் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 4000 ஊசிகள் வழங்கிய காட்சி.

ரெட் கிராஸ் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 4000 ஊசிகள்

Published On 2022-05-08 14:02 IST   |   Update On 2022-05-08 14:02:00 IST
ரெட் கிராஸ் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 4000 ஊசிகள் வழங்கப்பட்டது.
வேலூர், 

காட்பாடி வட்ட ரெட்கிராஸ் உலக ரெட்கிராஸ் தினம் திருவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. 

ஜீன் ஹென்றியின் டுனந்த் 195-வது பிறந்த நாளினை முன்னிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 4000 ஊசிகள்களையும், நலதிட்ட உதவிகளையும் காட்பாடி தாசில்தார் கே.ஜெகதீஸ்வரன் வழங்கினார்.

காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். பொருளாளர் வி.பழனி, வரவேற்று பேசினார். துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் ஆர்.விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் எம்.ராணி நிர்மலா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எம்.பாலசுப்பிரமணியன், மருந்தாளுநர் சாமுண்டீஸ்வரி, கூகுளே நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஷ்குமார், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், வாழ்நாள் உறுப்பினர்கள் தணிகை செல்வம், திருமகள் செல்வமணி, தன்னார்வலர்கள் எஸ்.ஜெ.சோமசுந்தரம், எஸ்.மோதகப்பிரியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News