உள்ளூர் செய்திகள்
வேலூர் விருப்பாட்சிபுரத்தில் 21 அடி உயரத்தில் அம்மன் சிலை கும்பாபிஷேகம்
வேலூர் விருப்பாட்சிபுரத்தில் 21 அடி உயரத்தில் அம்மன் சிலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வேலூர்:
வேலூர் விருப்பாட்சிபுரம் காந்திநகர் 15- வது தெருவில் உள்ள புற்றுநாகேஸ்வரி அம்மன் கோவிலில் 21 அடி உயரமுள்ள நாகேஸ்வரியம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
காலை 10 மணியளவில் யாகசாலையில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சக்தி அம்மா ஆசியுடன் பரிவார தெய்வங்களுக்கும் பூஜைகளை பாலமதி முருகன்கோவில் பிரபு சாமிகள் நடத்தி வைத்தார்.இதில் அந்த பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
21 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி அளிக்கும் அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.