உள்ளூர் செய்திகள்
சீ.ம.புதூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா
சீ.ம.புதூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நமைபெற்றது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் கல்வி வட்டாரத்திலுள்ள சீ.ம. புதூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடந்தது. சீ.ம.புதூர் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி, தலைமை தாங்கினார்.
வட்டார கல்வி அலுவலர்கள். ரங்கநாதன், தரணி, குணசேகரன், ஆறுமுகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சீ.ம.புதூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நம்பெருமாள், வரவேற்றார்.பள்ளி வளாகத்தில் மேடை அமைத்து ஆங்கிலம் உரையாடுதல், ஆத்திச்சூடி ஒப்புவித்தல்,
மாறுவேடப் போட்டி, பல்வேறு வேடம் அணிந்து நாடகங்கள், கலை நிகழ்ச்சி, ஆகியவற்றை மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஆண்டறிக்கை ஆசிரியர் சரவணன், வாசித்தார்.
இதில் தெள்ளார் வட்டார வள மேற்பார்வையாளர் ஜெயசீலன், ஆசிரியர் பயிற்றுநர் தமிழ்நேசன், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள், ஊர் பெரியவர்கள், மற்ற பள்ளி ஆசிரியர்கள், உள்பட பலர் கலந்துகொண்டனர்.முடிவில் ஆசிரியர் கங்காபரமேஸ்வரி, நன்றி கூறினார்.