உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கந்தர்வகோட்டையில் மனு கொடுக்கும் போராட்டம்

Published On 2022-05-07 15:17 IST   |   Update On 2022-05-07 15:17:00 IST
கந்தர்வகோட்டையில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:

கந்தர்வகோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது.

போராட்டத்திற்கு வடக்கு ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய தலைவர் ரத்தினவேல் முன்னிலை வகித்தார்.  

இந்த போராட்டத்தில் அரசு புறம்போக்குநிலங்களில் குடியிருந்து வரும் நபர்களுக்கு பட்டா கேட்டும், வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டும் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புவியரசனிடம் மனு கொடுத்தனர்.

முன்னதாக கந்தர்வகோட்டை வெள்ளை முனியன் கோவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்  

இந்த மனு கொடுக்கும் போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் ராமையன், சிஐடியு  கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News