உள்ளூர் செய்திகள்
காலியாக உள்ள துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள 10 பகுதிநேர துப்புரவாளர் (ஆண்)மாதம் ரூ.3000 என்ற தொகுப்பூதியத்தில்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
இந்த காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம் இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுதபடிக்க தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு 1.07.2022 தேதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதர பிரிவினருக்கு 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
இந்த தகுதிகளுடன் அரியலூர் மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதி நேர துப்புரவாளராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள்மா
வட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் மாதிரி விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்தும்,உரிய சான்றுகளின் நகல் இணைத்தும்,
சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒட்டி அதனை அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகம் முகவரியில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.5.22 பிற்பகல் 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கால தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது எனவும் மனுதாரரே முழுப்பொறுப்பு எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மனுதாரர்களை மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.