உள்ளூர் செய்திகள்
பாளை மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள காட்சி.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில மாநாடு-நெல்லை, பாளையில் கடைகள் அடைப்பு

Update: 2022-05-05 10:31 GMT
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 39-வது மாநில மாநாடு அதன் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் திருச்சி சமயபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி பாளை காந்தி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டது.
நெல்லை:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 39-வது மாநில மாநாடு அதன் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் திருச்சி சமயபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது. மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 

இதற்காக நெல்லை தென்காசி மாவட்டங்களை சேர்ந்த வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள், வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தனர். மேலும் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று மாலை முதலே கார், பஸ் மூலம் திருச்சி புறப்பட்டனர். 

இதன் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. பாளை காந்தி மார்க்கெட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்தது.

எனினும் மெயின் ரோடு சாலையோரம் உள்ள கடைகள் திறக்கப்பட்டிருந்தது. டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட் இரவு நேரம் செயல்படும் என்பதால் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை வழக்கம்போல் திறந்திருந்தது.

இதேபோல் திசையன்விளை ஆலங்குளம், பாவூர்சத்திரம், வள்ளியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. டவுன், சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் கடைகள் திறக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக வியாபாரிகள் கூறும்போது வருகிற 8-ந் தேதி முகூர்த்த தினம் என்பதால் பொதுமக்கள் பல்வேறு பொருட்கள் வாங்க வருவார்கள். எனவே அவர்களது நலன் கருதி இன்று கடைகள் திறக்கப்பட்டது என அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News