உள்ளூர் செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஆரணியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-05-04 15:19 IST   |   Update On 2022-05-04 15:19:00 IST
ஆரணியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கே.கே.நகர் பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இதில் அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் சொந்த இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெறறு வருகின்றன.

மேலும் குடியிருப்பு பகுதியில் செல்போன் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்கும் இடத்திற்கு வந்து செல்போன் நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தகலறிந்து வந்த ஆரணி டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்து தற்காலிகமாக செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

இதனால் சிறிது நேரம் குடியிருப்பு பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.

Similar News